எங்களை பற்றி
மத்திய இந்தியானா தமிழ் சங்கத்தின் இணையதளத்திற்க்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இச்சங்கம், இந்தியானாபோலிஸ் மற்றும் சுற்றுபுற பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கான ஒரு அமைப்பு. கடந்த 15-20 ஆண்டுகளாக இப்பகுதிகளில் வாழும் தமிழர்கள் பல்வேறு தமிழர் நிகழ்ச்சிகளை நடத்திய பொழுதும், இச்சங்கம் கடந்த 2006-ம் ஆண்டு முறையாக அமைக்கப்பட்டது.
தமிழர் திருவிழாக்கள், சமுக நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கு தமிழ் பள்ளி மற்றும் தொண்டு தான நிகழ்ச்சிகள் மூலம் தமிழ் மற்றும் தமிழர் கலாச்சாரம் வளர்பது இச்சங்கத்தின் குறிக்கோள் ஆகும். தமிழ் மற்றும் தமிழர் கலாச்சாரம் பற்றி ஆர்வம் உள்ள அனைவரும் இச்சங்கத்தின் உறுப்பினராகலாம்.
தமிழ் சங்கத்தின் நிகழ்ச்சிகள் மூலம் நமது குழந்தைகளுக்கு தமிழ் மற்றும் தமிழர் கலாச்சாரம் ஊட்டபடுகிறது. இந்நிகழ்ச்சிகள் மூலம் இந்தியானாபோலிஸ் பகுதிகளில் வாழும் தமிழர் கூடி பழகவும் ஓருவரை ஓருவர் அறிந்து கொள்ளவும் வாய்ப்பளிக்கிறது. நீங்கள் இச்சங்கத்தின் உறுப்பினராகி வழங்கும் நன்கொடை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த உதவுகிறது.
Subscribe to Tamil Sangam Newsletters & Notifications