English 
Login 
Skip Repetitive Navigational Links

தமிழ் பள்ளி

தலையாய நோக்கம்

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது தமி்ழ். கலாச்சாரம், பண்பாடு, விருந்தோம்பல், பிறருக்குக் கற்றுக் கொடுத்தல் என எல்லா வகையிலும் முன்னேறிய சமுதாயம் தமிழ்ச்சமுதாயம். அத்தகைய சீரும் சிறப்பும் வாய்ந்த நம் தமி்ழ் மொழியை, தமி்ழர் கலாச்சாரத்தை இண்டியாணாபோலிஸ் இளைய சமுதாயத்திடம் கொண்டு சேர்ப்பதே எங்கள் தலையாய கடமை. குறிப்பாக குழந்தைகள் தமி்ழில் பேசுவதை புரிந்துகொள்ளும் திறன், பேசும் திறன், எழுதும் திறன் ஆகியவற்றை ஊக்குவிப்பதே எங்கள் குறிக்கோள்.

பள்ளி விபரம்

இண்டியாணா தமி்ழ்ச் சங்கத்தின் சார்பில் தமி்ழ்ப் பள்ளி ஒவ்வொரு வாரமும் பிஸ்சர்ஸ்(Fishers) நூலகத்தில் 2 மணி முதல் 4 மணி வரை நடத்தப் படுகிறது. 5 வயதிற்கு மேற்ப்பட்ட குழந்தைகள் யாவரும் பள்ளியில் சேரலாம். உங்கள் குழந்தை 5 வயதிற்குட்பட்டவராக இருந்து தமி்ழ் கற்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தினால் தமி்ழ் ஆசிரியரை அணுகவும்.

ஒவ்வொரு வகுப்பும் தமி்ழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கப் படுகிறது. தமி்ழ் எழுத்துக்களை எவ்வாறு எழுதுவது, அந்த எழுத்துக்களை எவ்வாறு சொற்களில் பயன் படுத்துவது, அந்த சொற்களை எவ்வாறு வாக்கியங்களில் உபயோகப் படுத்துவது, கேள்விகள் கேட்பது மற்றும் பதில் சொல்வது பற்றியும் கற்றுத் தரப்படுகின்றது. மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் சிறு வினாடி வினா நிகழ்ச்சிகள் நடத்தப் படுகின்றது.

வீட்டுப் பாடங்களும் மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் குறுக்கெழுத்து, கோடிட்ட இடங்களை நிறப்புதல், ஆங்கிலச் சொற்களையும் அதற்கு ஈடான தமி்ழ்ச் சொற்களையும் கோடிட்டு இணைத்தல், பிழையான சொற்களைத் திருத்துதல் என்று மாணவர்களிடம் எளிமையாக சென்றடையும் வன்னம் அமைக்கப்பட்டுள்ளது.வீட்டுப் பாடம் மி்ன்னஞ்சல் மூலமாக பெற்றோர்களுக்கு புதன் கிழமை காலைக்குள் அனுப்பப்படுகின்றது.

இத்தோடு தமி்ழ் நீதிக் கதைகள், பாட்டு, பாரம்பரிய வரலாறு, பண்பாட்டுச் சிந்தனைகள் போதிக்கப்படும். பள்ளி வரும் ஒவ்வொரு குழந்தையும் தமி்ழ் மொழியைப் புரிந்து உரையாட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

பள்ளி பணியாளர்கள்

தமி்ழையும், தமி்ழ் கலாச்சாரத்தையும் நமது வருங்கால சந்ததியினருக்கு கொண்டு செல்வதற்கு தமது நேரத்தை கொடுத்து , இந்த பணியைத் தொடர்ந்து செய்து உதவி வருவோர்:

  • கண்ணன்
  • சொக்கலிங்கம்
  • ஜெயக்குமார்
  • இளவேனில் ராஜேந்திரன்
  • ரேணுகா
  • மஞ்சுளா
  • ஷர்மி்ளா